செய்திகள்

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுப்போம். அதற்காக மக்களின் அவலங்களில் அரசியல் செய்வதை நிராகரிப்போம் – புளொட்

Posted in 1 by ustamil on ஏப்ரல் 5, 2010

வெறும் வாய்சொல்லில் தேசியம் தேடுபவர்கள் தமது நீண்ட அரசியல் வாழ்க்கைக்காகவும் அதனூடான சுயலாபங்களுக்காகவும் நடைமுறைக்கு அப்பாலான எதிர்ப்பு அரசியல் அணுகுமுறைகளை வலிந்து கட்டிக்கொள்வதனால் தமிழர்களின் தேசிய இனப் பண்புகள் அழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு வருவதையே தொடர்ச்சியாக நாம் கண்டு வந்துள்ளோம். பேரினவாதம் எம் நிலங்களை அபகரிக்கவும் எமது மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு தொடர்சியாக இடம்பெயரவும் எமது சமூகக்கட்டமைப்புகளும் இனப்பரம்பலும் சின்னாபின்னப்படவும் கூடிய நடவடிக்கைகள் எதுவும் எமது தேசியத்தைக் காக்கும் நடவடிக்கைகளல்ல.

இவ்வாறு எதிர்ப்பு அரசியல் அணுகுமுறைகளை வலிந்து கட்டிக்கொள்வதனால் தமிழர்களின் தேசிய இனப் பண்புகள் அழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டுகிறன என்ற தலைப்பில் இன்றைய தினம் புளொட் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது., எமது அடிப்படை உரிமைகளுக்கான வழிமுறைகளை முன்னெடுக்கக்கூடிய நடைமுறைக்கு தேவையான அரசியல் கோட்பாடுகளை முன்னெடுப்பதுடன் , இன்பத்திலும் துன்பத்திலும் மக்களுடன் இணைந்து மக்களை விட்டகலாது மண்ணைப் பாதுகாத்து செயல்பட்டு வருகின்றோம்.

வெறும் வாய்சொல்லில் தேசியம் தேடுபவர்கள் தமது நீண்ட அரசியல் வாழ்க்கைக்காகவும் அதனூடான சுயலாபங்களுக்காகவும் நடைமுறைக்கு அப்பாலான எதிர்ப்பு அரசியல் அணுகுமுறைகளை வலிந்து கட்டிக்கொள்வதனால் தமிழர்களின் தேசிய இனப் பண்புகள் அழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு வருவதையே தொடர்ச்சியாக நாம் கண்டு வந்துள்ளோம். பேரினவாதம் எம் நிலங்களை அபகரிக்கவும் எமது மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு தொடர்சியாக இடம்பெயரவும் எமது சமூகக்கட்டமைப்புகளும் இனப்பரம்பலும் சின்னாபின்னப்படவும்கூடிய நடவடிக்கைகள் எதுவும் எமது தேசியத்தைக் காக்கும் நடவடிக்கைகளல்ல. (more…)

ஒளிமயமான எதிர்காலத்திற்கு அமைச்சரின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும்! முன்னாள் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர்.

Posted in 1 by ustamil on ஏப்ரல் 5, 2010

தனது நிறுவனத்தின் ஊழியர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்காத யாழ் பத்திரிகை நிறுவன உரிமையாளர் ஒருவர் தன்னைப் பற்றி தம்பட்ட மடித்துக் கொண்டு உங்கள் உரிமைக்கு உழைத்தவர் என்று தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டிருப்பது வேடிக்கையான விடயமென யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவர் பிரசன்னா யாழ் கொக்குவில் மேற்கு சிறிஞான பண்டிதர் வித்தியாசாலையின் கணினி கூடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலட தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மேற்படி கணினிக் கூடத்தைத் திறந்து வைத்ததுடன் இரு கணிகளை உடனடியாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இங்கு உரை நிகழ்த்திய யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ் குடாநாட்டை அபிவிருத்தியின்பால் இட்டுச் செல்கின்றார் என்றும் குடாநாட்டின் கல்வி அபிவிருத்தியும் இதனுள் அடங்கும் முக்கிய அம்சமாகும் என்றும் எனவே அமைச்சர் அவர்களது கரங்களைப் பலப்படுத்துவதன் ஊடாகவே எமது மக்களினதும் குடாநாட்டினதும் ஒளிமயமான எதிர்காலத்தை அடைய முடியுமென்றும் குறிப்பிட்டார்.

மேற்படி நிகழ்வில் உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எமது மக்களின் நலன்சார்ந்த திட்டங்களை நாம் படிப்படியாக மேற்கொண்டு வரும் நிலையில், சில சமூக விரோத சக்திகள் எம்மீது சேறு பூசும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இவ்வாறான சக்திகளுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமது மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்தார்.