செய்திகள்

17வது பற்றல் ஒவ் த கோல் கிரிக்கட் போட்டியில் சிவானந்தா வித்தியாலயம் வெற்றி

Posted in எங்கள் தமிழ் by ustamil on மே 16, 2010

17வது பற்றல்  ஒவ் த கோல் கிரிக்கட் போட்டியில்  சிவானந்தா வித்தியாலயம் 126 ஓட்டங்களால் திருக்கோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியை வெற்றி கொண்டது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சிவானந்தா வித்தியாலயம் முதலில் துடுப்பெடுத்தாடியது. நிர்ணயிக்கப்பட்ட 50 பந்து பரிமாற்றங்களில் 42 பந்து பரிமாற்றங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் சுபராஸ் 39, தயாளன் 24, தவா 23 ஓட்ங்கள பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில்  தேவவிதுரன் 31ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும்,  சுஜிந்த பிரகாஷ்44 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும் பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி 17.2 ஓவர்களில்  சகல விக்கட்டுக்களையும் இழந்து  73 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

சுதர்சன் 15 ஓட்டங்கள், சுபேந்தரன் 14  ஓட்டங்களை  பெற்றுக்கொண்டனர். பந்த வீச்சில் புருஷோத் 20 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டக்களைப் பெற்றுக் கொண்டார்.

இதன் மூலம் சிவானந்தா வித்தியாலயம் 126 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 1993 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட இப்போட்டி 17வது தடவையாக நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி 11 தடவைகளும் சிவானந்தா வித்தியாலயம் 6 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன.

பின்னூட்டமொன்றை இடுக