செய்திகள்

கனடா பிரைஜையை கோட்டாவின் கடத்தல் கும்பல் கடத்தியுள்ளது.

Posted in எங்கள் தமிழ் by ustamil on ஜூலை 27, 2012

சமூகவலை தளம் ஒன்றில் புலிகளுக்கு ஆதரவான படங்களை பிரசுரித்திருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கனடா பிரைஜையை இனம்தெரியாத நபர்கள் எனப்படும கோட்டபாயாவின் கடத்தல் கும்பலின் ஸ்ரீலங்கா புலனாய்வுத் துறையினர் கடத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக் கடத்தல் சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸாருக்கும் கனடா தூதுவராலயத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்வர் எதுவித ஆபத்துக்கள் இன்றி இருப்பதாகவும், விசாரணகள் நிறைவடைந்ததும் குறிப்பிட்ட நபரை விடுவிப்பதாகவும் கோட்டபாயாவின் கடத்தல் கும்பல் உறவினர்களுக்கு தெரிவித்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தின் வதிரி கரவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட கனேடியப் பிரஜை நடராசா ஜெகநாதன் என்பவர் ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டார்.
யாழ்ப்பாணம் சென்றிருந்த கனேடிய பிரஜை ஒருவர் நேற்று கடத்தப்பட்டுள்ளதாக புகார் செய்யபப்பட்டுள்ளது.
வடமராட்சியின் வதிரி கரவெட்டியை சேர்ந்தவரான 53 வயதுடைய நடராசா ஜெகநாதன் என்பவரே கடத்தப்பட்டுள்ளார்.
தனது தம்பியாராது மகனது திருமணத்திற்காக சுமார் 25 வருடங்களின் பின்னர் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் சகிதம் வந்திருந்ததாக தெரியவருகின்றது.
இந்நிலையில் நேற்று மாலை 4.00 மணியளவில் வாகனமொன்றினில் சென்ற ஆயுததாரிகள் சிலர் அவரை விசாரணைக்கென அழைத்து சென்றுள்ளனர்.
எனினும் அவரை எங்கு கொண்டு செல்கின்றனர் என்ற எந்தவொரு தகவலையும் தமக்கு தெரிவிக்கவில்லை என குடும்பத்தவர்கள் தெரிவித்தனர்.
ஆயினும் கொழும்பிலிருந்து சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினரே அவரை விசாரணைக்கு கொண்டு சென்றதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 25 வருடங்களுக்கு முன்னதாக கனடாவிற்கு புலம் பெயர்ந்திருந்த நிலையில் ஜெகநாதன் தற்போதே நாடு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக குடும்பத்தவர்கள் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவருகின்றது.
புலம் பெயர்ந்து பின் நாடு திரும்பிய கனேடிய பிரஜை ஒருவர் அண்மையிலே கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் இவ் ஆட்கடத்தல் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

“நீதிக்காய் ஒன்றுபடுவோம்” நேரலையில்

Posted in எங்கள் தமிழ் by ustamil on பிப்ரவரி 26, 2012
நீதிக்காய் ஒன்றுபடுவோம் எங்கள் தமிழ் நேரடி ஒலி ஒளி பரப்பு.

நீதிக்காய் ஒன்றுபடுவோம் எங்கள் தமிழ் நேரடி ஒலி ஒளி பரப்பு.

இலங்கை தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை, சர்வதேசத்திடம் வலியுறுத்தும் வகையில், ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர் தொடங்குகின்ற நாளில், நீதிக்காய் ஒன்றுபடுவோம் எனும் மாபெரும் மக்கள் போராட்டத்துக்கு, புலம்பெயர் தமிழர்கள் ஜெனீவாவில் ஒன்றுகூட தயாராகி வருகின்றனர்.
இந் நிகழ்வினை “எங்கள் தமிழ்! “ நேரடி ஒலி ஒளி பரப்பு செய்யவுள்ளது

வானொலிகள் கேட்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது

Posted in எங்கள் தமிழ் by ustamil on நவம்பர் 30, 2010

வானொலிகள் கேட்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை மாவீரர் தினம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்ககப்படுகின்றது.

மாவீரர் தினத்தை முன்னிட்டு வானொலிகள் கேட்பதற்கு தமிழ் மக்களுக்கு நான்கு நாட்கள் தடை விதிக்கப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது

இராணுவ புலனாய்வு துறையினரின் தீவிர கண்காணிப்பிலிருக்கும் மக்களுக்கு மேலும் விசனத்தை ஏற்படுத்துவதாக இச் செயற்பாடு அமைந்ததாக அப்பகுதி மக்கள் வர்ணிக்கின்றனர்.

மாதிரி மாவீரர் துயிலுமில்லம் அமைத்து புலம் பெயர் தேசங்களில் அனுஸ்டிக்ப்பட்ட மாவீரர் தின நினைவு நிகழ்வுகளில் வழமை போன்று கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதுடன் அங்காடி வியாபாரங்கள் இடம் பெற்றன, யேர்மனியில் மலிவு விலையில் மரக்கறிகள் விற்பனையாகியன என்பதும் குறிப்பிடத்தக்கது.