செய்திகள்

இந்.இராணுவத் தளபதியுடன் இந்.பாதுகாப்புத்துறையும் இரகசிய விஜயம். கே.பி மீதான விசாரனை ஆரம்பம்

Posted in எங்கள் தமிழ் by ustamil on செப்ரெம்பர் 11, 2010
விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுத விநியோகஸ்தரும், சர்வதேச பொறுப்பாளரும், தற்போது ஸ்ரீலங்கா அரசின் கட்டுப்பாட்டில் இருப்பவருமான கே.பி. எனப்படும் செல்வராஜா பத்மநாதன் இந்திய அதிகாரிகளால் கொழும்பில் விசாரிக்கப்பட்டு வருவதாக பத்திரிகையாளர் வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன் கிழமை 8ம் திகதி கொழும்ப விரைந்த இந்திய அதிகாரிகள் விசாரனையை ஆரம்பித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவித்துள்ளதாகவும், குறிக்கப்பட்ட இந்திய உயர் அதிகாரிகள் வருகை தந்திருந்ததை தான் நேரடியாக அறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் சனிக்கிழமை இடம் பெற்ற உலக தமிழ் பண்பாட்டியக்கம் நடாத்திய “அகம் புலம் தமிழர் வாழ்வியல்” மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகையில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தான் ஜேர்மனிக்கு புறப்படுகையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய இராணுவத்தளபதிக்கு வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றதை அவதானித்ததாகவும், இதே வேளை பிற இந்திய உயரதிகாரிகள் அன்று வருகை தந்திருந்ததை அவதானித்ததாகவும் கூறினார்.
இவர்களின் வருகை தொடர்பாக தனக்கு கிடைத்த தனிப்பட்ட தகவலின் படி செல்வராஜா பத்மநாதனை விசாரனை செய்யவுள்ளதாகவும்;, இவ் விசாரனைகள் கடந்த புதன் கிழமை முதல் ஆரம்பித்துள்ளதை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் விஜய் குமார் சிங்கின் 5 நாள் விஜயம் தொடர்பாக ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்த போதும், ஏனைய இந்திய பாதுகாப்புத்துறை உயரதிகாரிகளின் வருகை தொடர்பாக இரகசியம் பேணப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டமொன்றை இடுக