செய்திகள்

வாக்குப் பெட்டிகளுக்கு ஸ்ரிக்கர்கள் ஒட்ட நடவடிக்கை.

Posted in 1 by ustamil on ஏப்ரல் 3, 2010
வாக்குப்பெட்டிகளின் உள்ளேயும் ஸ்ரிக்கர்களை ஒட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இதனை அவர் தெரிவித்திருக்கிறார். தேர்தல் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பெட்டிகளைப் பார்வையிடும் கட்சிப்பிரதிநிதிகள் கட்சி ஸ்ரிக்கர்களை ஒட்ட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அதே போன்று தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்த பின்னர் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரும் ஸ்ரிக்கர்கள் ஒட்டுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதே வேளை வாக்களிப்பு நிலையங்களுக்குள் கமரா, கையடக்கத் தொலைபேசி, ஐகைப்பைகள் கொண்ட செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தமிழர்கள் ஒற்றுமையா கவாக்களிக்க வேண்டும்.

Posted in 1 by ustamil on ஏப்ரல் 3, 2010
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலமான அணியாக பாராளுமன்றத்திற்கு அனுப்புவதன் மூலம் மாத்திரமே சர்வதேச சமூகத்தின் உறுதியான ஆதரவைப் பெறமுடியும் என்பதை ஒவ்வொரு தமிழ் வாக்காளனும் உணரவேண்டிய நிலைக்கு வந்துள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் தலைவரும் திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுபவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
மூதூர் பிரதேசத்தின் கிளிவெட்டியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்திலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் உரையாற்றிய அவர், யுத்தம் இல்லாத சூழ்நிலையில் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு உறுதியானதும் நிரந்தரமானதும் நியாயமானதும், நடைமுறைப்படுத்துவதற்கும் ஏற்ற அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் சர்வதேசம் இருக்குக்கிறது. சர்வதேச சமூகம், தனது அடுத்த நகர்வுக்காக எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் வழங்கப்போகும் தீர்ப்பை உன்னிப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்த் தேசியப் பிரச்சினை இன்று நேற்று உருவானதல்ல. நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே தமிழ்த் தேசியப் பிரச்சினை ஆரம்பமானது. அறுபது வருட வரலாறு கொண்ட இப்பிரச்சினைக்கு தந்தை செல்வநாயகம் சமஷ்டி அரசமைப்பின் கீழ் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடங்களில் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் சுயாட்சி அதிகாரப் பகிர்வு கோரிக்கையை முன்வைத்தார்.
அப்போதைய அரசாங்கங்களுடன் ஒப்பந்தங்களைச் செய்தார். அவை எல்லாம் கிழித்தெறியப்பட்டன. சாத்வீகப் போராட்டங்களை நடத்தினார். அப்போதைய அரசுகள் தமிழ் மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டன. அக்கட்டத்தில் தான் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். (more…)

ஐ.நா. இலங்கை விடயத்தில் இரட்டை வேடம் போடுகிறது.

Posted in 1 by ustamil on ஏப்ரல் 3, 2010
ஐக்கிய நாடுகள் சபை இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்பட்டு வருவதாக இலங்கை குற்றஞ்சாட்டியுள்ளது. ஈராக்கில் பிரிட்டன் சம்பந்தப்பட்டமை பற்றி விசாரிப்பதற்காக  ஆணைக் குழுவை நியமிப்பதற்கு  9 ஆண்டுகள் எடுத்தன. இலங்கை தொடர்பாக ஆராய விசேட நிபுணர்குழுவை அமைக்க 9 மாதங்களுக்கிடையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம என தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் இலங்கையழல் நடைபெற்ற யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நிபுணர் குழுவொன்றை அமைப்பது குறித்து ஐ.நா. வேகம் காட்டுவதாகவும் இது அதன் இரட்டை நிலைப்பாட்டையே காட்டுவதாகவும்  வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம குறிப்பிட்டுள்ளார்.
பான் கீ மூனால் எழுப்பப்பட்ட விடயங்கள் தொடர்பாகத் தீர்வு காண்பதற்கு அரசாங்கத்துக்கு அதிகளவு கால அவகாசத்தை ஐ.நா. செயலாளர் நாயகம் வழங்கியிருக்க வேண்டும்.
2009 மே இல் நாங்கள் பயங்கரவாதத்தை தோற்கடித்திருக்கிறோம். இப்போது 2010 ஏப்ரலாகும். இலங்கையில் 9 மாதங்கள் மட்டுமே கழிந்துள்ளன. எமக்கு அதிகளவு காலத்தை செயலாளர் நாயகம் வழங்கியிருந்தால் அது சிறப்பானதாக அமைந்திருக்கும் என்று அமைச்சர் போகொல்லாகம கூறியுள்ளார்.
அதேசமயம், விசேட நிபுணர் குழு அமைக்கப்படும் காலப்பகுதியையிட்டு அரசாங்கம் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. தேர்தலுக்கு முன்னராக இது தொடர்பாக இந்த மாதிரியான தீர்மானம் ஏன் எடுக்கப்பட்டது என்பது கவலைக்குரிய விடயம் என்று அரசாங்கம் சந்தேகம் தெரிவிக்கிறது.