செய்திகள்

இருபாலை வேளாதோப்பு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா

Posted in எங்கள் தமிழ் by ustamil on மே 24, 2010

யுத்தத்தால் சிதைவடைந்த வணக்கஸ்தலங்களை புனரமைக்கப்பட்டு பூசை வழிபாடுகளை மேற்கொள்ளும் விதத்தில் ஏற்பாடுகளை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில் இருபாலை வேளாதோப்பு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான சித்திரத் தேர் வெள்ளோட்ட விழா நேற்று நடைபெற்றது.

இவ் ஆலயத்தின் சித்திரத்தேரை ஜீவரட்ணம் ஜெயப்பிரகாஷ் உருவாக்கியிருக்கிறார். இவருக்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தது.

கோயிலில் சிறப்பு பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து மண்டபத்தில் பிரதீபன் தலைமையில் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் ஆசியுரைகளை நல்லை அதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், ஆலய பிரதம குரு சௌபாக்கிய குமாரக் குருக்கள், யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சிவலிங்கராஜா ஆகியோரும் சிறப்பு விருந்தினர் உரையை யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அவர்களும் நிகழ்த்தினர்.

தொடர்ந்து சித்திரத் தேரை வடிவமைத்து உருவாக்கிய ஜீவரட்ணம் ஜெயப்பிரகாஷ் ஆச்சாரியாருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பொற்கிளி வழங்கியதுடன், பொற்பதக்கம் அணிவித்தும் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டமொன்றை இடுக