செய்திகள்

வன்னியில் படையினரின் துணையுடன் கால்நடைகள் திருட்டு

Posted in எங்கள் தமிழ் by ustamil on ஓகஸ்ட் 10, 2010
வன்னி மக்களின் ஜீவனபாய தொழிலாகிய விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கால்நடைகள் ஏற்கனவே தென்பகுதிக்கு கடத்தப்பட்டுள்ளு நிலையில் மீதி கால் நடைகளும் தொன்பகுதிகளுக்கு கடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது
கடந்த ஆண்டு முல்லைத்தீவு தண்ணீர்ஊத்திலிருந்து இடம்பெயர்ந்து மீண்டும் சமீபத்தில் மீள்குடியேறிய ஒரு விவசாயி தனது எஞ்சியிருந்த கால்நடைகளில் சுமார் 27 எருமை மாடுகளை மட்டும் ஒருவாறு மீட்டுள்ளார்,  மேலும் அதன் புதிய கன்றுகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரமளவில் மீட்கப்பட்ட கால்நடைகள் களவாடப்பட்டு வேறு இடத்திற்கு ஓட்டிச் செல்லப்பட்டுள்ளது. அத்துடன் மாட்டின் மீது சொந்தக்காரர் இட்ட குறிக்கும் மேலாக தடித்த இரும்பினால் புதிதாகக்குறி இடப்பட்டு அதன் அடையாளமும் மாற்றப்பட்டிருந்தது.
இது தொடர்பாக முல்லைத்தீவு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் எதுவிதப் பலனும் கிட்டைக்கவில்லை. இதையடுத்து குறிப்பிட்ட விவசாயி தற்துணிவில் தனது மாடுகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து லொறியில் முல்லைத்தீவு காவல்நிலையத்திற்கு எற்றிச் சென்றுள்ளார். ஆதாரபூர்வமாக களவுபற்றி நிரூபித்த பின்னரும் உரிய நடவடிக்கைகளை எடுக்காது, சம்பவம் பற்றி யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என வலியுறுத்தப்பட்டு மாடுகளை வீட்டுக்கு ஏற்றிச் செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளார்.
இக் கால்நடை திருட்டுக்கள் மீளக்குடியேற்றப்பட்ட பின்னர் தொடர்ச்சியாக நிகழ்வதாகவும், இதற்கு மார்க்கத்தைச் சேர்ந்த சிலர் சிங்கள மொழியை சரளமாக பேசுவதால் இராணுவத்துடன் நெருக்கமாகி இச் செயலில் ஈடுபடுவதாக தெரிவிக்கின்றனர்.
இது இப்படியே தொடருமானால் அது தமிழ் மக்களுக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் இருக்கின்ற சுமுக உறவைப் பாதிக்கும் என்றும் இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்துவது அவசியம் என்றும் அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். உரியவர்கள் சிந்திப்பார்களா? பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மனவேதனையை உணர்ந்து செயல்படுவார்களா?

பின்னூட்டமொன்றை இடுக